வடகோவை அருகே தண்டவாளத்தில் கிடந்த சடலம் - ரயில்வே போலீசார் விசாரணை!

வடகோவை ரயில்நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த 40 மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் விபத்தா? தற்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை வடகோவை ரயில்நிலையம் அருகே ரயிலில் சிக்கி ஒருவர் பலியான நிலையில், விபத்தா, தற்கொலையா என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடகோவை ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கதக்க நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இந்நிலையில், அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இது விபத்தா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...