கோவையில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி - கணவரை தொடர்ந்து மனைவி கைது!

கோவை கணபதி அருகே கடந்த 2019ஆம் ஆண்டில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்த கணவர் செந்தில்குமாரை தொடர்ந்து மனைவி லலிதாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கணபதி அருகே நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.



கணபதி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (34). இவரது மனைவி லலிதா (28). இவர்கள் இருவரும் மேலும் 5 பேருடன் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு அந்த பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 17.5 சதவீத வட்டியுடன் 100 நாட்கள் கழித்து ரூ.2 லட்சம் திரும்ப தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மற்றொரு திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 20 சதவீத வட்டியுடன் 12 மாதங்கள் கழித்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் திருப்பி தரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இந்த கவர்ச்சிகர அறிவிப்புகளை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2020-ம் ஆண்டு புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் ஆய்வாளர் செல்வராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.3 கோடி வரை பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரின் மனைவி லலிதாவை ஆய்வாளர் செல்வராணி தலைமையிலான போலீசார் இன்று கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...