பொள்ளாச்சியில் ரூ.1.48 கோடி மதிப்பில் புதிய காய்கறி மார்க்கெட் - கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த நகர்மன்ற தலைவர்.

பொள்ளாச்சி அடுத்த தேர்நிலையம் பகுதியில் ஏற்கனவே இருந்த காய்கறி மார்க்கெட் பழுதானதால், ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் புதிய காய்கறி மார்க்கெட் அமைக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கட்டுமான பணிகளை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதிகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புதிய காய்கறி மார்க்கெட்டுக்கான கட்டுமான பணிகளை நகர்மன்ற தலைவர் சியாமளா தொடங்கி வைத்தார்.

பொள்ளாச்சி தேர் நிலையம் பகுதியில் பழமை வாய்ந்த காய்கறி மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடைகள் அனைத்தும் பழுதான நிலையில் இருந்தது.

இதன் காரணமாக புதிய கடைகளுக்கான கட்டுமான பணிகளுக்காக கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.



இதனையடுத்து பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. மேலும் புதிய கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமாளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



இதனை தொடர்ந்து நகர் மன்ற தலைவர் சியமளா பேசியதாவது, தற்போது இந்த பகுதியில் புதிதாக 56 கடைகள் கட்டப்பட உள்ளதாகவும் விரைந்து 6 மாத காலத்திற்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஒரு கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளர் நித்தியானந்தன், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...