கோவை வெள்ளலூரில் பழக்கடை உரிமையாளரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு

கோவை வெள்ளலூர் பெருமாள் ஶ்ரீநகரில் பழக்கடை நடத்தி வரும் பாலமுருகன் என்பவரை, தொழில் போட்டி காரணமாக தகாத வார்த்தைகளில் பேசி, கல்லால் தாக்கிய பிரேம்குமார் மற்றும் தங்கவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: வெள்ளலூரில் பழக்கடை உரிமையாளரை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை வெள்ளலூர் பெருமாள் ஶ்ரீநகரை சேர்ந்தவர் பாலமுருகன் (19). இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடையின் அருகே வெள்ளலூர் அம்மன் நகரை சேர்ந்த பிரேம்குமார் (29) என்பவரும் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

தொழில் ரீதியாகப் பாலமுருகன் மற்றும் பிரேம்குமார் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பாலமுருகன் கடையிலிருந்த போது அங்குச் சென்ற பிரேம்குமார் மற்றும் தங்கவேல் (40) ஆகிய இருவரும் பாலமுருகனை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஓரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரேம்குமார், பாலமுருகனை கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமார் மற்றும் தங்கவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...