வதந்தி வீடியோ பரப்பிய 3 பேரை கைது செய்துள்ளோம்..! - கோவையில் டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

வட இந்திய தொழிலாளர்கள் தாக்குதல் தொடர்பாக போபால், பாட்னா உட்பட பல இடங்களில் போலீசார் முகாமிட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்களுடன் தொடர்ந்து உரையாடல் நடத்தப்படுகிறது. வதந்தியால் பீகார், ஜார்கண்ட் சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் அதிகளவு பயந்து உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.



கோவை: தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியநிலையில், முதல்வர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு கண்காணிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டனர். மேலும், பீகார் மாநில அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.



இந்நிலையில், கோவை மாவட்ட தொழில் அமைப்பினருடன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டார். கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மற்றும் சேலம் சரக டிஐஜிகள், 8 மாவட்ட எஸ்.பிக்கள் கலந்துகொண்டனர்.



இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை சரகத்தில் உள்ள தொழில்முனைவோர், தொழில் அதிபர்களுடன் சந்தித்தோம். வதந்திகளால் ஏற்பட்ட குழப்பம் சரியான முறையில் கையாண்டதற்கு தொழில்துறையினர், ஊடகங்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நிலைமை சரியாக இருக்கிறது. தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடக்காமல் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர். போபால், பாட்னா உட்பட பல இடங்களில் போலீசார் முகாமிட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்களுடன் தொடர்ந்து உரையாடல் வைத்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வாட்ஸ்அப் குழுக்களும் துவங்கப்பட்டுள்ளது. பீகார், ஜார்கண்ட் பகுதியை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் அதிகளவு பயந்து இருக்கின்றனர்.

அவர்கள் மொழியில் இது தவறானது என தகவல்களை தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. வைரல் வீடியோ தொடர்பாக இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹோலி பண்டிகைக்கு சென்ற தொழிலாளர்கள் 15 நாட்களில் திரும்ப வாய்ப்பு உள்ளது.



போலீசார் களநிலவரத்துக்கு ஏற்றபடி பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் துப்பாக்கியை பயன்படுத்துவார்கள். சில நேரங்களில் லத்தியை பயன்படுத்துவார்கள். அவர்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள தற்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும். களத்திற்கு ஏற்ப அவர்கள் செயல்படவேண்டியுள்ளது. சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கூகுள்பேவில் உங்கள் கணக்கில் தொகையை போட்டுவிட்டு, பின் லிங்க் அனுப்பி திருப்பி அனுப்ப சொல்லுவார்கள். அப்படி லிங்க் அனுப்பினால், அதில் சில தகவல் கேட்கும். அப்படி தகவலை தெரிவித்து விட்டால் உங்கள் கணக்கில் இருந்து முழு பணத்தையும் திருடி விடுவார்கள். அப்படி ஏதாவது லிங்க் வந்தால் அந்த எண்ணை பிளாக் பண்ணிவிட்டு காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

வீட்டை உடைத்து திருடுவதில்லை. வங்கி கணக்கினை சீசனுக்கு ஏற்றபடி திருடுகின்றனர். ஒடிபி, வங்கி கணக்கு எண்ணை வங்கிகளில் இருந்து யாரும் கேட்கமாட்டார்கள். ஓடிபி எண்ணை யாருக்கும் கொடுக்க கூடாது.

இவ்வாறு, டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தினார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...