வடமாநில தொழிலாளர் வதந்தி விவகாரம் - பாஜக செய்தி தொடர்பாளரை கைது செய்ய தடை

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய உத்தர பிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ், சென்னை உயர்நீதிமன்றத்திலோ அல்லது சம்மந்தப்பட்ட நீதிமன்றத்திலோ ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


டெல்லி: வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் குறித்து வதந்தி பரப்பிய உத்தர பிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவை வரும் 20ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தி பேசியதற்காக தமிழ்நாட்டில் 12 பீகார் தொழிலாளர்கள் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய உத்தர பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.



அவரை கைது செய்ய டெல்லி மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களுக்கு தமிழ்நாடு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பிரசாந்த் உம்ராவ் தாக்கல் செய்த மனு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிரசாந்த் உம்ராவ் தரப்பில் 12 வாரங்கள் ஜாமீன் கேட்டு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால், வதந்தி பரப்பியதற்காக பிரசாந்த் உம்ராவ் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. பிரசாந்த் உம்ராவ் மீது தீவிரமான குற்றச்சாட்டு உள்ளதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பிரசாந்த் உம்ராவை வரும் 20ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். பிரசாந்த் உம்ராவ் சென்னை உயர்நீதிமன்றத்திலோ அல்லது சம்மந்தப்பட்ட நீதிமன்றத்திலோ ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அவரது செல்போன் லொகேஷன் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றை ஆன் செய்து வைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...