கோவையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.150 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடங்கள் மீட்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் ரூ.11.10 கோடி மதிப்பிலான 1.05 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியிலுள்ள பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் கண்டறிந்து, விரைவில் மீட்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுவரை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களிலிருந்து கடந்த 2016 நவம்பர் மாதம் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.64.70 கோடி மதிப்பிலான 5.34 ஏக்கர் அளவிலான இடங்களும், டிசம்பர் மாதம் சுமார் ரூ.55.45 கோடி மதிப்பிலான 3.77 ஏக்கர் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டது.

இதேப்போன்று 2017 ஜனவரி மாதம் சுமார் ரூ.26.2 கோடி மதிப்பிலான 2.72 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களும் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும், மீட்கப்பட்ட இடங்களில் பூங்கா அமைத்தல், தோட்டங்கள் அமைத்தல், மரம் செடிகள் நடுதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனை தொடர்ந்து 18.2.2017 அன்று மட்டும் மாநகராட்சியிலுள்ள நான்கு மண்டலங்களான மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் ரூ.11.10 கோடி மதிப்பிலான 1.05 ஏக்கர் அளவிலான இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...