கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து மார்ச் 12-யில் போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசைக் கண்டித்து வருகிற மார்ச் 12- ஆம் தேதியன்று கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டம் நடத்த இருப்பதாக கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள எல்லைக்குள் 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகின்றது.

அதில் பாலக்காடு மாவட்டம் தேக்குவட்டை என்ற இடத்தில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் மஞ்சகண்டி உள்ளிட்ட மற்ற இடங்களில் தடுப்பு அணைகள் கட்டும் பணியினை துரிதப்படுத்தியுள்ளது.

இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் விவசாயம் மட்டுமில்லாது குடிநீர் தட்டுபாடும் மிக பெரிய அளவில் ஏற்படும் என்பதால் கேரளா அரசு தடுப்பணைகள் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது.

இந்த சூழலில் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக, தந்தை பெரியார் திராவிட கழகம், கொங்கு ஜனநாயக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட விவசாயிகள் கூட்டமைப்பு ஆகியவை பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் சுப்பு லட்சுமி ஜெகதீசன், முத்துச்சாமி, தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் வழித்தடமான க.க.சாவடியை மறித்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வருகிற மார்ச் 12 ஆம் தேதி கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளை மறித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...