மெரினாவில் காந்தி சிலை அருகே மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதம்

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனால் திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதில் திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வில் பலர் தாக்கப்பட்டனர்.



இதை தொடர்ந்து, சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, தாங்கள் தாக்கப்பட்டது குறித்து முறையிட்டார். பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு நேராக மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகில் வந்தார். அங்கு காந்தி சிலை முன்பு திடீரென எம்.எல்.ஏ.க்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் தி.மு.க. எம்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் மெரினாவில் திமுகவினர் குவிந்து வருகின்றனர். மெரினாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...