சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியேறிய திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியே வந்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.



தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிரணியில் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரின் நாற்காலி, மைக்கை உடைத்தனர். அப்போது, தி.மு.க உறுப்பினர் பூங்கோதை, மேஜையின் மீது ஏறி கோஷமிட்டார். இதற்கு திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து சபாநாயகர் தி.மு.க எம்,எல்,ஏக்களை சட்டமன்றத்தில் இருந்து வெளியேற உத்தரவுவிட்டார். இந்நிலையில் திமுக எம்,எல்,ஏக்களை அவைக்காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டார்.  சட்டப்பேரவைக்குள் தரையில் அமர்ந்து மு.க.ஸ்டாலினுடன் திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது 20 திமுக உறுப்பினர்கள் உள்பட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது அவைக்காவலர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியே வந்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். சட்டமன்றத்தில் நடந்ததை விளக்கினார். தற்போது திமுக உறுப்பினர்கள் கவர்னரை சந்திக்க செல்வதாகவும் அவர் கூறினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...