கிடப்பில் போடப்பட்ட பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை திட்டம் - பரிதவிக்கும் 10 கிராமங்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 50 கோடி ரூபாய் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட பொள்ளாச்சி மேற்கு புறவழி சாலை திட்டம், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கனரக வாகனங்கள் சிரமமின்றி செல்லவும் பொள்ளாச்சி அடுத்துள்ள கோவை சாலை ஆட்சிபட்டி முதல் தொடங்கி சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன் முத்தூர், நல்லூர் வழியாக சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்துக்கு குறுகிய தார் சாலையாக இருந்ததை விரிவாக்கம் செய்யப்பட்டு புறவழிச்சாலை அமைத்து பாலக்காடு சாலையை சென்றடையும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் 50 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி பணிகள் தொடங்கப்பட்டது.



இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், தார் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக கற்களாக தற்பொழுது காட்சியளிக்கிறது. மேலும், வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.



இதனால், சுமார் பத்து கிராமங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு மாற்றுப்பாதையில் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.



அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி மேற்கு புறவழிச் சாலை திட்ட பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...