ஹூண்டாய் கார் கம்பெனியுடன் எக்ஸெல் பாலிடெக்னிக் கல்லூரி உடன்பாடு

நாட்டில் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வரும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், நாமக்கல் எக்ஸெல் பாலிடெக்னிக் கல்லூரியில் “ஹூண்டாய் தொழில் மேம்பாட்டு மையம்” ஒன்றை துவக்கியுள்ளது.

நிறுவனங்களின் சமுதாய பொறுப்புகளின் ஒரு பகுதியாக ஹூண்டாய் நிறுவனம், தரமான கல்வியுடன், கார், இன்ஜின், கியர் பாக்ஸ் மற்றும் கல்வி உபகரணங்களுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை வழங்க முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக நாமக்கல் எக்ஸெல் பாலிடெக்னிக் உடன் இணைந்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் இன்டியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஒய்.கே கூ இதுகுறித்து கூறுகையில், “எக்ஸெல் பாலிடெக்னிக் உடன் இணைந்து, ஒரு பொறுப்புள்ள நிறுவன குடிமகனாக திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆட்டோமொபைல் சேவை ஆலோசகர்களை உருவாக்கும் இந்த மையம், மாணவர்களுக்கு நவீன வாகன தயாரிப்பு தொழில் நுட்பங்களை வழங்குவதோடு, வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தரும்,” என்றார்.

புதிய பாடத்திட்டம் மற்றும் பயிற்சிகள், ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்துக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும். பாலிடெக்னிக் கல்லூரியில் திறமையானவர்களை உருவாக்குவதோடு, இந்திய வாகன சேவை தொழிலுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

நிறுவனங்களின் சமுதாய பொறுப்புணர்வின் கீ்ழ், திறன் மேம்பாட்டு பயிற்சியானது முதல்முறையாக 2012ம் ஆண்டு ஐடிஐ பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி அளித்தது. தற்போது நாடு முழுவதும் 38 ஐடிஐ-க்களைக் கொண்டுள்ளது.

மாநிலத்துக்கு குறைந்தபட்சம் ஒரு ஐடிஐ உடன், பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டில் பயிற்சி பெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் பயின்றோரில் 95 சதவீதத்தினருக்கு ஹூண்டாய் டீலர்களிடம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் ஐடிஐக்களில் படித்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பயனடைந்துள்ளனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...