ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள்


ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (NOVACEST) நோவாசெஸ்ட் விழா மற்றும் SKAவினாடிவினா போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தரராமன் சிறப்புரையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு நேரம், காலம் எண்ணாது, வகுப்பறை, பொது இடங்கள் என்றச் சூழல் கருதாது (E-Learning) இருபத்துநான்கு மணிநேரமும் படிக்கலாம் என்ற இணையதளத்துடன் இணைந்துள்ள நிலையாகிய (Online) வசதி வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. அத்தகைய வாய்ப்பினை முறையான வகையில் மாணவர்கள் பயன்டுத்த வேண்டும் என்று கூறினார். 



கல்லூரி முதல்வர் ராதிகா மாணவர்களுக்கு உலகம் முழுவதும் கணினியுடன் நேரடித் தொடர்புடைய வசதிகள் சிதறிக் கிடக்கின்றன. கிடைக்கும் வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்துவதில்லை, எல்லோரும் அதனைப் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என தனது உரையில் கூறினார். SKA வினாடிவினா போட்டி  (Online) இணையதளத்துடன் இணைந்துள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கிடையே நடைபெற்றது. இப்போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்களுக்கு சுழற்கோப்பையும் ரூபாய் 3000 பணப்பரிசாகவும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு பி.வி.பி பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது. (NOVACEST) நோவாசெஸ்ட் விழாவில் பல்வேறு போட்டிகள் நடைப் பெற்றன. கணினி அறிவியல், வணிகவியல், கணிதம் ஆகிய துறைகளில், துறை வாரியாகக் கருத்தரங்குகள், வினாடிவினா, வர்த்தகம், வார்த்தை விளையாட்டு எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கு முதல் பரிசு ரூபாய் 500, இரண்டாம் பரிசு ரூபாய் 300 எனப் பணப்பரிசும், மூன்றாம் பரிசு சான்றிதழுமாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ மாணவியர்க்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...