ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தியதற்க்கு 8 நாள் சம்பளத்தை பிடித்ததை கண்டித்து மில் தொழிலாளர்கள் போராட்டம்

கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய என்.டி.சி மில் தொழிலாளர்களில் 8 நாள் ஊதியத்தை அபராதமாக பிடித்தம் செய்யபோவதாக என்.டி.சி மில் நிர்வாகம் அறிவித்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.



கோவை புலியகுளம் பகுதியில் மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் பங்கஜா மில் செயல்பட்டு வருகிறது. இங்கு 400க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த மாதம் தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த்து. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த 20 ஆம் தேதி பங்கஜா மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒருநாள் போராட்டம் நடத்தியதற்க்கு அபராதமாக 8 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பங்கஜா மில் ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மில் வாயிலை முற்றுகையிட்டு நிர்வாகத்துக்கும் மத்திய அரசுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த மாதத்துக்கான ஊதியதொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலை நீடித்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...