மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தலைமையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

கோவை மாநகராட்சி மத்திய மண்டல மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தலைமையில் நடைபெற்றது.



 

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில், "மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர்  தலைமையில் ஐந்து மண்டலங்களிலுள்ள உதவி ஆணையாளர்களின் மேற்பார்வையில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் ஐந்து மண்டலங்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை சென்று பொது மக்களிடம் மனுக்கள் பெற்று வருகின்றது.

மேலும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மத்திய மண்டல மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் (பொ) தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைத் தொட்டிகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், அடிப்படை வசதி என பல்வேறு உதவிகள் கோரி 14 மனுக்கள் பெறப்பட்டது. 

இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி, மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா, உதவி வருவாய் அலுவலர் மகேஸ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மத்திய மண்டல மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...