காதலர் தினத்தை கண்டித்தும் கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவுத் தூண் கோரியும் பாரத் சேனா அமைப்பு ஆட்சியரிடம் மனு


கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவுத் தூண் வைக்கக் கோரியும், காதலர் தினத்தைக் கண்டித்தும் மற்றும் அயல்நாட்டு குளிர்பானத்தை தடைசெய்யக் கோரியும் பாரத் சேனா அமைப்பின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதியன்று கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பயங்கரவாதிகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் 58 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நடைபெற்று தற்போது 19 ஆண்டுகள் ஆவதால் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டி.பி.சாலையில் நினைவுத் தூண் அமைக்க கோவை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அம்மனுவில் பிப்ரவரி 14ம் தேதியன்று காதலர் தினம் என்ற போர்வையில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகளை தடுக்க வேண்டும் என்றும் பாரத் சேனா சார்பில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதைத்தொடர்ந்து, பாரத் சேனா கோவை மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டி, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அயல்நாட்டு குளிர்பானங்கள் மற்றும் அயல்நாட்டுப் பொருட்களை விற்பனை செய்வதை தடைசெய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...