கோவை கூட்ஸ்செட் சாலையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு சுவர் ஓவியம்!


சேலம் டிவிசன் தெற்கு ரயில்வே துறை மற்றும் அறம் பவுண்டேஷன் சார்பில் கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள சுவர்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவர்களால் சுவர் ஓவியம் வரையப்பட்டது. 



இதனை சுமார் 225க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்து ரயில்வே சம்பந்தமான ஓவியங்கள், இயற்கை ஓவியம், உடல் உறுப்பு தானம் குறித்த ஓவியம், மனித உரிமை மற்றும் குழந்தைகளுக்கான கார்டூன் ஓவியம் போன்றவற்றை வரைந்தனர். இதற்கான பெயிண்டிங் மற்றும் இதர தேவைகளை சென்னீஸ் நிறுவனம் வழங்கியது. 

 



இதனை கோவை மாநகர போக்குவரத்துறை துணை ஆணையர் சரவணன் பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் மாணவர்கள் சுவர் ஓவியம் வரைவதற்கு சாலை ஓரங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைத்தும் பாதுகாப்பு வழங்கினார். இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவதையும் ஊக்குவித்தும் மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் அவர் தெரிவித்தார். இதனை கோவை அறம் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட்டின் அறங்காவலர், லதா சுந்தரம் ஒருங்கிணைத்தார்.



Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...