ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இந்திய அளவிலான கல்லூரி முதல்வர்களின் 18-வது சர்வதேச கருத்தரங்கம் நாளை துவக்கம்


அகில இந்திய முதல்வர்கள் சங்கம் சார்பில் இந்திய அளவிலான கல்லூரி முதல்வர்களின் 18-வது சர்வதேச கருத்தரங்க மாநாட்டினை கோவை குனியமுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் வரும் பிப்ரவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் நடத்த உள்ளது.



இம்மாநாட்டில் இந்தியாவிலிருந்து பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் தலைசிறந்த கல்வியாளர்கள் என மொத்தம் 300 பேர் கலந்து கொண்டு கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து விவாதிக்க உள்ளனர்.

இக்கருத்தரங்க மாநாடு இந்தியாவில் கல்வித்துறையில் பல முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கல்லூரி முதல்வர்கள் இணைந்து செயல்படும் சங்கமானது 1998-ம் ஆண்டு தில்லியில் தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது தேசிய அளவில் கல்லூரி முதல்வர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகும். இது வி.ஆர்.ஸ்ரீகுருகர் அவர்களை நிறுவனர் மற்றும் தலைவராகவும், ஜி.ராமசந்திரம் அவர்களை செயலாளராகவும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் கிட்டத்தட்ட 538 கல்லூரி முதல்வர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச கருத்தரங்க மாநாடு "முன்னேற்றத்தை நோக்கி" எனும் பொருளில் நடைபெறவுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பி விருந்தினராகவும், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்க உள்ளனர்.

மேலும், பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் ஏ.கணபதி, ஏஐசிபி தலைவர் வி.ஆர்.ஸ்ரீகுருகர், ஆர்.கே.மகாஜன் மற்றும் சுபாஸ் பிரம்பத் ஆகியோர்ங்கேற்று கருத்தரங்கினை துவக்கிவைத்து உரையாற்றவுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...