பாரதியார் பல்கலை.யில் பேராசிரியர் பணி நியமன முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மாணவர்கள் சார்பில் மனு


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி நியமன முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தவும், முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தரை பணி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி அப்பல்கலைக் கழக முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. 

இந்நிலையில் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தர் கணபதியை பணி நீக்கம் செய்யக்கோரியும், அப்பல்கலைக் கழக முன்னாள் முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 

தொடர்ந்து, புகார் அளிக்க வந்த முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் தெரிவிக்கையில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் 76 பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளதாகவும், இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், கோடிக்கணக்கான ரூபாய் அளவில் ஊழல் நடந்து இருப்பதாகவும் பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர்.

மேலும், துறைக்கு சம்மந்தமில்லாதவர்களிடமும், தகுதியற்ற நபர்களிடமும் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்து இருப்பதாகவும், இந்த முறைகேடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

பேராசிரியர் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டுமெனவும், முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தரையும் பணி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் பட்டதாரிகள் வலியுறுத்தினர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...