கோவை விழாவின் ஒரு பகுதியாக 'மண்டலா' வகை ஓவியங்களின் கண்காட்சி துவக்கம்

கோவை ஜென்னி க்ளப்பில் செயல்பட்டு வரும் ஆர்ட் ஹவுஸ் கேலரி 'மண்டலா' வகை ஓவியங்களின் கண்காட்சியினை கோவை விழாவின் ஒரு பகுதியாக இன்று (27, ஜனவரி, 2017) நடத்தியது. 

இதனை ஜிஆர்டி சிபிஎப் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் சித்ரா வித்யபிரகாஷ் மற்றும் 136.1 யோகா மற்றும் நல்வாழ்வு மையத்தின் முதன்மை செயல் அதிகாரி வி.செந்தில் குமார் ஆகியோர் இணைந்து இக்கண்காட்சியினை துவக்கி வைத்தனர். 

இந்தக் கண்காட்சி இன்று முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை காலை 11 மணிமுதல் மாலை 7 மணி வரை ஆர்ட் ஹவுஸ் கேலரியில் நடைபெறவுள்ளது.

இந்த மண்டலா ஓவியங்கள் என்பது மிகவும் சிக்கலான வடிவங்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஓவியங்கள் ஆகும். பொதுவாக இது வட்ட வடிவில் இருக்கும். மண்டலா என்னும் வார்த்தை சமஸ்கிருதத்தில் வட்டத்தை குறிக்கும் வார்த்தை ஆகும். மண்டலா ஓவியங்களில் ஒரு கண்டுகொள்ளக் கூடிய மையப்புள்ளி இருக்கும். இதில் இருந்து பல வடிவங்களும், குறியீடுகளும், உருவாக்கப்பட்டு இருக்கும். 



இதில், கோவையைச் சேர்ந்த பல மண்டலா ஓவியர்களின் ஓவியங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 

136.1 யோகா மற்றும் நல்வாழ்வு மையத்தின் முதன்மை செயல் அதிகாரி வி.செந்தில் குமார் இதுகுறித்து கூறுகையில், 'மண்டலா ஓவியம் என்பது புத்தபிச்சுக்களால் நேபாலத்தில் மத சம்பிரதாயத்தில் ஒரு முக்கிய அம்சமாக விலங்குகிறது. இது நேபாலத்தின் பாரம்பரிய கலையாகும். 

இது மற்ற கலைகளில் இருந்து மிகவும் மாறுபட்ட கலைவடிவமாகும். இதை உருவாக்குவோரின் முழு ஈடுபாடும் இந்த ஓவியத்தை உருவாக்குவதில் மட்டுமே இருக்க வேண்டும். இது ஒருவகையான தியானம் என்றும் கூறப்படுகிறது.

இது யோகாவின் ஒரு பகுதியென்றும் கூறலாம். யோகாவில் மண்டலாவை அடிப்படையாகக் கொண்ட ஆசனங்கள் இருக்கிறது. இக்கலையானது கோவைக்கு ஒரு புதிய முயற்சியாகும். இதனை கோவை விழாவின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்கிறோம்'.

திருநங்கையான கல்கி சுப்ரமணியம் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த அவரது தோழர்களுடன் இக்கண்காட்சியினை காண வந்திருந்தார். அப்போது நமது நிருபருக்கு அவர் அளித்த பேட்டியில், 'மண்டலா என்பது வேதிக் ஜியோமெட்ரிக் மற்றும் கணக்குகளைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு ஓவியம் ஆகும். பொதுவாக உலகத்தில் உள்ள அனைத்தும் ஏதோ ஒரு கணக்கில் தான் உருவாக்கப்பட்டுள்ளது என கூறுவார்கள். இந்த கலை வடிவம் நமது வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறது.

அனைவராலும் இந்த மண்டலா கலையானது ஏதோ ஒரு வடிவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு பெயர் மூலம் அறியப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை நாம் இடும் கோலம் மண்டலாவின் ஒரு வகையே ஆகும்" என்றார்.

இந்த விழாவில் கோவை விழாவின் தலைவர், பிரவீன் குமார் மற்றும் யெங் இந்தியாவின் உபதலைவர், பிரசன்னகுமார் ஆகியோர் பங்கேற்றனர். 

கோவை விழாவின் ஒரு பகுதியாக வரும் ஜனவரி 30ம் தேதியன்று அனிமேஷன், மீடியா ஆர்ட்ஸ் உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்புகள் குறித்து திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எம்.வெங்கடேசன் நடத்தும் ஒரு கருத்தரங்கும் நடைப்பெறவுள்ளது. 

ஜனவரி 31ம் தேதியன்று மண்டலா நமஷ்காரம் மற்றும் திபெத் பாடும் தியானம் ஆகியவை 136.1 யோகா மற்றும் நல்வாழ்வு மையத்தினரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட உள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...