கூட்டுறவு அமைச்சரின் பெயரை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு அமைச்சரின் பெயரை பயன்படுத்தி உயரதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலைகளில் பயோ மெட்ரிக் இயந்திரங்கள் வழங்கபட்டதாகவும் இதன் அடிப்படை விலை 3400 ரூபாய் எனவும் அதிக பட்ச விலையான 6000 சங்கங்கள் நிர்ணயித்து காசோலைகள் பெறபட்டதில் ஒன்றரை கோடி ரூபாய் வரை நிதி மோசடி நடந்துள்ளது என கூறினர்.

கூட்டுறவு சங்கங்கள் நவீன முகப்புடன் இருக்கும் நிலையில் நவீன மயமாக்குதல் என்ற பெயரில் நிதியை செயல்படுத்த உள்ளது கூட்டுறவுக்கு இழப்பு ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக இதனை கைவிட வேண்டும் என்றனர்.

நியாய விலைக் கடைகளில் உள்ள காலி சாக்குகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்பிருந்தும் மாநில அலவில் துணை பதிவாளர் சரகம் வாயிலாக குழுக்கள் அமைக்கபட்டு 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 350 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் சங்கங்கள் மூலமே விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், கணினி பராமரிப்பு என்ற பெயரில் துறை உத்தரவு இல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கு மாதம் 4000 ரூபாய் வரை மாதந்தோரம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்ற இந்த மோசடி நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு பணியாளர்கள் சுமார் 100-கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Newsletter

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...