கோவை: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என்ற கேரள சி.பி.எம் நிலைபாட்டிற்கு தமிழக சி.பி.எம் எதிர்ப்பதாக சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் ஒரு லட்சத்தி 38 ஆயிரம் பொறியல் பட்டதாரிகள் மற்றும் ஆயிரகணக்கான பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி வருவதாகவும் , கடந்த 50 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகள் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தாமையே இதற்கு காரணம் எனக் குற்றம்சாட்டினார்.
மேலும் திமுக அதிமுக கட்சிகளே கல்வியை பாழடித்ததாகவும் அவர் கூறினார். சிறு தொழில்கள் அழிந்து வருவதாகவும் ஊதுபத்தி, கொலுசு , பொட்டு , பிள்ளையார் சிலைகள் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாக தெரிவித்தவர், தாங்கள் அணி ஆட்சிக்கு வந்தால் சிறு தொழில் வளர்சிக்கும் , நவீன கருவிகள் மூலம் விவசாய வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுவதோடு தமிழக சட்டமன்ற ஜனநாயகமும் காக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டப்படுமென கேரள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக எழுபப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழ் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாகவே தமிழக சி.பி.எம். செயல்படும் எனவும் கேரள சி.பி.எம் நிலைபாட்டிற்கு இவ்விவகாரத்தில் தீர்வு பெற கேரள அரசிடம் தமிழக அரசு பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.