கோவை: கோவையில் நூறு சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி தங்க நகைப்பட்டறை தொழிலாளி நூதன பிரசாரம் நடத்தி வருகிறார்.
கோவையச் சேர்ந்த தங்க நகைப்பட்டறை தொழிலாளி ராஜா. இவர் ஒவ்வொரு தேர்தலின் போதும் பொதுமக்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த மூன்று தேர்தல்களாக நூதன பிரச்சாரம் செய்து வருகிறார். முதல் தேர்தலில் 10 விதமான பட்டங்களில் அனைத்து கட்சி கொடிகள், சின்னங்கள் செய்து பறக்கவிட்டும், தன்னுடைய குழந்தைக்கு அனைத்து கட்சி கொடி மற்றும் சின்னங்களை கொண்ட காகிதத்தால் ஆன, ஆடையை அணிவித்து பொது மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டி பிரசாரம் செய்வதாக ராஜா கூறினார்.
இதுகுறித்து ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மே 2016-ல் நடைபெற உள்ள தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வைத்துள்ள விளம்பர பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை பார்க்கும் போது நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த தேர்தலில் எனது பங்காக வாக்கு ஜனநாயகத்தின் அளவுகோல் என்பதை குறிக்கும் வகையில் ஒரு அடி மர அளவுகோலில் 10 சின்னங்களை செதுக்கி வடிவமைத்துள்ளேன்.
இதில் இந்தியா, மே16-ல், 100சதவிகித வாக்குபதிவு, வாக்குபதிவை குறிக்கும் வகையில் ஆட்காட்டி விரலில் மை வைத்துள்ளது உட்பட்ட பத்து சின்னங்களை மூன்று நாடகளாக கிட்டதட்ட பன்னிரெண்டு மணி நேரம் வேலை செய்து செதுக்கியது அனைவரும் தேர்தல் நாளில் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான்.
ஓட்டுக்காக பணம் மற்றும் இலவசங்களை வாங்கி மக்கள் ஓட்டளிக்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். தேர்தல் ஆணையம் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி செய்து வருகின்ற அனைத்து விளம்பரங்களும் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், பொது மக்களும் 100 சதவிகித வாக்குபதிவு நடக்க இது போன்று வித்தியாசமாக விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.
பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமை வாக்களிப்பது, என்பதை உணர்ந்து எதிர்காலம் சிறப்பாக அமைய மக்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க தயாராகவே உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்