கோவை: தேமுதிக கட்சியை கட்டுக்கோபாக வைக்க முடியாத நிலையில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த் உள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பாக கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை முதல் தேர்தல் பிரசாரத்தை அவர் துவக்கி உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு பதிலாக மாற்று கட்சி ஆட்சி அமைக்க வேண்டும். அந்த மாற்று சக்தியாக பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தற்போது பிரசாரத்தின் போது கடந்த எம்.எல்.ஏகள் மீதான அதிருப்திகளை பொதுமக்கள் தெரிவித்தனர். அவர்களின் எதிர்பார்புகள் மட்டும் பிரச்னைகள் குறித்து கோவை தெற்கு பா.ஜ.க இணையதள பக்கத்தில் பதிவு செய்து வருகின்றோம்.
இதன் அடிப்படையில் தெற்கு தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை 10 நாட்களுக்கு தயார் செய்ய உள்ளோம். ஒரு கட்சி உடைய பா.ஜ.க ஆசைபடவில்லை. தற்போது கூட்டணி அதிருப்தி காரணமாக தேமுதிக முக்கிய நிர்வாகிகள் வெளியேறி உள்ளது, அக்கட்சியின் தலைவரும் முதல்வர்
வேட்பாளருமான விஜயகாந்த் கட்சியை கட்டுக்கோபாக வைக்க முடியாத நிலையை காட்டுகிறது. மேலும், மக்கள் நலக் கூட்டணியால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது எனவும், பொது விஷயங்களில்ல் தெளிவு இல்லாத இக்கூட்டணி மக்களிடம் எடுபடாத கூட்டணி எனவும் தெரிவித்தார்.