சென்னை: தேமுதிக தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அனைத்து நிர்வாகிகளையும் கட்சியிலிருந்து நீக்கி தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மாலையில் உத்தரவிட்டார்.
தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளரும், ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினருமான சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்டச் செயலாளர், சி.எஸ்.சேகர், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர், ஜெ.விஸ்வநாதன், வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர், என். கார்த்திகேயன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர், செஞ்சி சிவா, விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர், கே.எம்.வீரப்பன், உயர்மட்டக் குழு உறுப்பினர், இமயம் என்.எஸ்.சிவக்குமார், ஈரோடு மாவட்டச் செயலாளர், பி.செந்தில்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் கூட்டணி குறித்து கட்சியின் முடிவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என இன்று பிற்பகல் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் மேற்கண்ட அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், கட்சிப் பதவிகளிலிருந்தும் நீக்கம் செய்து விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும், புதிய நிர்வாகிகளையும் அவர் நியமித்துள்ளார். நீக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கட்சித் தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் விஜயகாந்த் அப்போது வலியுறுத்தியுள்ளார்.