சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திடீர் திருப்பமாக, மக்கள் நல கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தேமுதிகவில் உள்ள எம்.எல்.ஏ., சந்திரகுமார் தலைமையில் 5 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 10 மாவட்ட செயலாளர்கள் திடீரென கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் ஐவரும் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் தே.மு.தி.க. கட்சி இரண்டாக பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் தலைமையில் 3 எம்எல்ஏக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளனர். விரைவில் அவர்கள் செய்தியாளர்களிடம் பேச உள்ள நிலையில், கும்மிடிப்பூண்டி தேமுதிக எம்எல்ஏ சேகர் மற்றும் மேட்டூர் தொகுதி தேமுதிக எம்எல்ஏ பார்த்திபன் ஆகியோரும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.