மாலுமி இல்லாத படகு

உலகிலேயே முதல் முறையாக, மாலுமி இல்லாத படகு ஒன்று, தானாகவே வட அட்லாண்டிக் கடலைக் கடந்திருக்கிறது.

உலகிலேயே முதல் முறையாக, மாலுமி இல்லாத படகு ஒன்று, தானாகவே வட அட்லாண்டிக் கடலைக் கடந்திருக்கிறது.

நார்வேயைச் சேர்ந்த, 'ஆப்ஷோர் சென்சிங்' இரண்டு ஆண்டுகளாக இந்த சாதனையை செய்ய முயன்று தோற்றது.

கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட மாலுமி இல்லாத படகு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில ஆயிரம் கி.மீ., பயணித்த பிறகு, தடுமாறிக் கொண்டிருந்தது. ஒரு மீன்பிடி படகு, அந்த மாலுமி இல்லாத படகை மீட்டு வந்தது.

ஆனால், ஜூன், 7 அன்று நியூபவுண்ட்லாந்திலிருந்து புறப்பட்ட, 'செய்ல் பயோய் மெட்' என்ற மாலுமி இல்லாத படகு, 3,000 கி.மீ.,தொலைவில் உள்ள அயர்லாந்து கடற்கரையை, ஆகஸ்ட், 26 அன்று வந்தடைந்தது.

சூரிய மின் பலகையும், பாய் மரமும் பொருத்தப்பட்ட செய்ல் பயோய் படகில், மாலுமி இல்லாத தொழில்நுட்பக் கருவிகளுடன் கடும் காற்று, காட்டமான அலைகள் என, எல்லாவற்றையும் சமாளித்து கரை சேர்ந்துள்ளது.

ஓட்டுனர் இல்லாத கார்களைப் போலவே, கடலிலும் மாலுமி இல்லாத படகுகள், அடுத்த, 10 ஆண்டுகளுக்குள் வந்துவிடும் என, வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

சிந்து சமவெளி காலத்து கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட ஜோடி எலும்புக்கூடுகள்

உலகின் பழமையான நகர்புற நாகரிகங்களின் ஒரு பகுதியில் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் ஆணும் பெண்ணும் ஒரே கல்லறையில்...

விண்வெளியிலிருந்து வரும் மர்ம சிக்னலுக்கு காரணம் வேற்றுக்கிரக வாசிகளா? ஐந்து சாத்தியங்கள்

விண்வெளியில் 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வெளியான அரியவகை ரேடியோ சிக்னல் கனடா நாட்டின் வான் நோக்கு நிலையம் ஒன்றி...

இமயமலையில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : இந்திய விஞ்ஞானிகள் எச்சரிக்கை

டெல்லி : இந்தியாவின் அரணான இமயமலையில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் எச்சரித்துள...

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள்: ஆதாரத்துடன் உறுதி செய்த விஞ்ஞானிகள்!

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடியும் பெண்களுக்கு 70 தலைமுடியும் உதிர்கின்றன !

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைத்திருந்தாலும் அது பழ வகையை சார்ந்ததாகும்.