காற்றடைத்த சக்கரம்

ஆரம்ப காலத்தில் மிதிவண்டிகளின் சர்க்கரங்கள் உலோகம் மற்றும் கட்டைகளால் ஆக்கப்பட்டிருந்தன. இதை ஓட்டும் போது ஏற்படும் அதிர்வுகளை குறைக்க கட்டை சர்க்கரத்தின் மேல் இரப்பர் பட்டை ஒட்டப்பட்டன. பார்க்க படம்.

Bicycle – வெலாசிபீட் (Velocipede) (லத்தீன் மொழியில் விரைந்து செல்லும் கால்கள் என்று பொருள்) என்பது மனித சக்தியை கொண்டு இயக்கப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்கரங்களை கொண்டு இயங்கும் ஊர்திகளுக்கான பெயராகும். அதிலிருந்து பிரிந்து வந்தது தான் பைசைக்கிள் எனப்படும் மிதி வண்டி.





ஆரம்ப காலத்தில் மிதிவண்டிகளின் சர்க்கரங்கள் உலோகம் மற்றும் கட்டைகளால் ஆக்கப்பட்டிருந்தன. இதை ஓட்டும் போது ஏற்படும் அதிர்வுகளை குறைக்க  கட்டை சர்க்கரத்தின் மேல் இரப்பர் பட்டை ஒட்டப்பட்டன. பார்க்க படம்.



1887- ல்ஜான் பாய்ட் டன்லப் (John Boyd Dunlop)  என்பவர்  கட்டை சர்க்கரத்துடனான சைக்கிளை ஓட்டுவது   தனது மகனுக்கு தலைவலி உண்டாகிறது என்ற காரணத்திற்காக காற்றடைத்த டயரை உருவாக்கினார். இது அதிர்வுகளை குறைத்ததோடு வண்டியின் வேகத்தையும் அதிகப்படுத்தியதால் அதிவிரைவில் பிரபலமானது. இதன் மூலம் ( Dunlop Pneumatic Tyre Co. Ltd  ) டன்லப் ந்யுமாடிக் டயர் கம்பெனி லிமிடெட் என்ற கம்பெனி 1890 ல் உருவானது. ஆனால் இதற்கான காப்புரிமையை பெற அவர் முயன்ற போது மறுக்கப்பட்டது ஏனென்றால்..அவருக்கு முன்னதாகவே  ராபர்ட் வில்லியம் தாம்ஸன் என்பவர் ( Robert William Thomson). இதை செயல்படுத்தி காட்டியதாக பதிவு செய்யப்பட்டிருந்ததே காரணம். எனவே காற்றடித்த சக்கரத்தை நடைமுறைப்படுத்தி காட்டியவர் டன்லப் என்றாலும் அதை கண்டுபிடித்த பெருமை ராபர்ட் வில்லியம் தாம்ஸன் என்பவரையே சாரும். இரயில்வே துறையில் இஞ்சினியரான இவர் 1846-ல் தனது 24 ஆவது வயதில் இந்த சாதனையை புரிந்து பேடண்ட் எனும் காப்புரிமையை பெற்றிருக்கிறார்.



தற்போது  இருக்கும் ட்யூப் மற்றும் டயரை தனித்தனியாக பிரிக்கும் முறையை  Édouard Michelin மைக்களின் என்பவர் 1891-ல் உருவாக்கினார்.

Newsletter

சிந்து சமவெளி காலத்து கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட ஜோடி எலும்புக்கூடுகள்

உலகின் பழமையான நகர்புற நாகரிகங்களின் ஒரு பகுதியில் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் ஆணும் பெண்ணும் ஒரே கல்லறையில்...

விண்வெளியிலிருந்து வரும் மர்ம சிக்னலுக்கு காரணம் வேற்றுக்கிரக வாசிகளா? ஐந்து சாத்தியங்கள்

விண்வெளியில் 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வெளியான அரியவகை ரேடியோ சிக்னல் கனடா நாட்டின் வான் நோக்கு நிலையம் ஒன்றி...

இமயமலையில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : இந்திய விஞ்ஞானிகள் எச்சரிக்கை

டெல்லி : இந்தியாவின் அரணான இமயமலையில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் எச்சரித்துள...

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள்: ஆதாரத்துடன் உறுதி செய்த விஞ்ஞானிகள்!

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடியும் பெண்களுக்கு 70 தலைமுடியும் உதிர்கின்றன !

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைத்திருந்தாலும் அது பழ வகையை சார்ந்ததாகும்.