லட்சுமி விலாஸ் வங்கியின் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி கண்காட்சி

கோவை, அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் லட்சுமி விலாஸ் வங்கியின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி கண்காட்சி ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இக்கண்காட்சியானது, அனைத்து வகையிலும் தொழில்துறையினருக்கு உதவும் வகையில் மேபடுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சிறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினரின் முன்னேற்றம், தொழில்சார்ந்த விவாதங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.



இது குறித்து, லட்சுமி விலாஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி முகர்ஜி பேசுகையில்; இந்திய பொருளாதரத்தில் சிறு, நடுத்தர பொருளாதரத்தில், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன என்பதை புரிந்து கொண்டுள்ளோம். இந்த நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவருவதிலும், நிலையான லாபத்தை ஈடுபடுவதிலும், வருவாயை அதிகரிப்பதிலும் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. இக்கண்காட்சியால் புதிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கும். வங்கிக்கும், பொதுமக்களுக்கும் என இருதரபினருக்கும் பயனுள்ளதாக அமையும். இன்னும் பல்வேறு இடங்களில் இது போன்ற கண்காட்சியை நடத்த வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த வாய்ப்புகளை சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.    



மேலும், வாடிக்கையாளர்களின் அரங்குகளுடன், வங்கியின் பிற சேவைகளான ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு, உடல் நலத்துக்கான மருத்துவ காப்பீடு மற்றும் வங்கியின் சேவைகள் போன்றவைகளும் இடம் பெற்றுள்ளன. சில தொழில் நிறுவனகளுக்கு மட்டுமின்றி, பிற வகையிலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து மகிழ்வோடு கண்காட்சியை கண்டு களிக்க, பொழுதுபோக்கு நிகழ்சிகளுடன் அறுசுவை உணவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...