கோவையில் இரவு நேரங்களில் தொடரும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம்!


கோவை வஉசி மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் நடைபெறும் தொடர் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் நீடிக்கிறது.



 

இதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலமாக ஒரு டன்னுக்கு மேலாக குப்பைகள் இருந்தும் அதனை மூன்று நாளாக அகற்றப்படாமலும் இருந்து வந்தது. கோவை மாநகராட்சி இதற்கான ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது.





இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைத்து மைதானத்தில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த குப்பைகளை சேகரித்தும் அதனை மூட்டை மூட்டையாக கட்டி மைதானத்தில் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்தது. இளைஞர்கள் கூட்டம் அதிகரித்தாலும் குப்பை தொட்டி வசதிகள் இல்லாததாலும் மைதானத்தில் குப்பைகள் அதிகம் ஆனது. பின்னர் மாநகராட்சியின் பார்வைக்கு இதனை கொண்டு செல்லப்பட்டு இரவு நேரத்தில் லாரிகள் மூலம் துப்புரவாளர்கள் மூலமாக குப்பைகள் அகற்றப்பட்டது. மூன்று லாரிகள் மூலம் ஒரு டன்னுக்கு மேலாக குப்பைகள் மைதானத்தில் இருந்து அகற்றப்பட்டது. 

மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டம் இங்கு நடைபெறுவதால் கோவை மாநகராட்சி இப்பகுதியில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் எற்படுத்தியும் அதனை துப்புரவாளர்கள் மூலமாக அகற்றவும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...