கோவை ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி - மும்பை ரயிலை மறித்து சட்டகல்லூரி மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜல்லிகட்டு விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத  மத்திய அரசை கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி - மும்பை ரயிலை மறித்து  சட்டகல்லூரி மாணவர்கள்  போரட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிகட்டு போட்டி நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி  கோவையில் அனைத்து கல்லூரிகளை  சேர்ந்த மாணவர்களும் , இளைஞர்களும் மூன்றாவது நாளாக வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் வ.உ.சி மைதானத்திற்கு சென்று கலந்து கொண்டனர். 

பின்னர் 50க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் வ.உ.சி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  கோவை ரயில் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் , ரயில் நிலையத்திற்குள் சென்று கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மத்திய அரசு ஜல்லிகட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும் , பீட்டா அமைப்பினை  கொண்டு வந்ததே பா.ஜ.க அரசுதான் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

காவிரி விவகாரத்தில் ஓரு நிலைப்பாடும், ஜல்லிகட்டு விவகாரத்தில் ஓரு நிலைப்படும் எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், மக்கள் விழித்துக்கொண்டார்கள் எனவும் ஜல்லிகட்டுக்கு அனுமதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை சமரசப்படுத்திய காவல் துறையினர் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பி வைத்தனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் காரணமாக ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...