ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் பத்திரிகையாளர்கள் பேரணி

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை உடனடியாக நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு மீது நீதிமன்றம் விதித்துள்ள தடையினை நீக்க வேண்டும். ஜல்லிக்கட்டினை எதிர்த்து தமிழர்களின் கலாச்சாரத்தினை அழிக்கும் பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லட்சக்கணக்கான இளைஞர்கள் மேற்கொண்டுள்ள இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் உட்பட தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள், ஐடி ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை அனைத்து பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடைபெற்றது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி, கோவை இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வஉசி மைதானம் சென்றடைந்தது.

இப்பேரணியின் போது பத்திரிகையாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்கி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பியபடி பேரணி சென்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...