மவுன மொழியோடு போராடலாம்: கோவையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேட்டி



கோவையில் நடைப்பெற்று வரும்  ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் ஹிப்ஹாப்  ஆதி கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். 



இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய மாநில அரசுகள் தமிழக மக்களின்  நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். இன்று கோவையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறும். இங்கு அமர்ந்துள்ள மாணவர்கள் அனைவரும் மவுன மொழியில் ஜல்லிக்கட்டுக்கான தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.





அரசியல்வாதிகளைப் போல் மாணவர்கள் விரக்தியடைந்து கலவரங்களில் ஈடுபடாமல் அமைதியான முறையில் வாயில் கருப்புத் துணி கட்டி மவுனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. 

தமிழகம் முழுவதும் மாணவர்களால் நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்தில் நேற்று சில பகுதிகளில் காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது வருத்தமளிக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்தில் அரசு கவனம் செலுத்தி உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

நமது கலாச்சாரத்தை காக்க இளைஞர்கள் இணைந்து நடத்தி வரும் இப்போராட்டத்தை முடக்காமல் அரசு நிர்வாகமும், காவல் துறையினரும் தீர்வுக்கான வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு விளையாட்டு காளைகளை கொடுமைபடுத்துவதாக உள்ளது என சிலர் நினைப்பது தவறானது. தேசிய ஊடகங்கள் இதுகுறித்தான உண்மை விழிப்புணர்வை அனைவருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்.

நடைமுறைக்கு சாத்தியமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் நடத்தப்பட்டு வரும் இப்போராட்டம் வெற்றிபெற வேண்டும். இப்போராட்டம் இவ்வளவு அமைதியான முறையில் எவ்வித சேதமும் இன்றி நடைபெறுகிறது என்றால் அதற்கு மாணவர்களே காரணம். மாணவர்களின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும், எம் என் சி போன்ற நிறுவனங்களும் ஜல்லிக்கட்டிற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்களை அடக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நிறுவனத்தினர் இப்போராட்டத்தை கவனித்து கலாச்சாரத்தை காக்க இணைந்து போராட முன்வர வேண்டும்" என்றார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...