கோவையில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு


கோவை வஉசி மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு கோவை வழக்கறிஞர்களும், பொதுமக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். 



பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடும் இளைஞர்கள் மத்தியில் தங்களுடைய ஆதரவினை அளித்து வருகின்றனர். அதேபோல் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் மற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டிற்காக தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். 



கோவை மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி, பறை இசை மற்றும் பல்வேறு கோஷங்களாலும் ஜல்லிக்கட்டிற்கு தடைகோரும் பீட்டா அமைப்பிற்கும், இதுகுறித்து தற்போது வரை நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுக்கும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 



மேலும், போராட்டத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு அமைப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தண்ணீர், பிஸ்கட் மற்றும் உணவுகள் போன்றவற்றை வழங்கி உதவிகளை செய்து வருகின்றனர். 



இதனிடையே, மாணவர்கள் சிலர் ஒருங்கிணைத்து போராட்டம் நடைபெற்று வரும் மைதானத்தில் ஏற்படும் குப்பைகளை சுத்தம் செய்தும், குப்பை தொட்டி இல்லாததால் அதனை மூட்டைகளில் சேகரித்தும் வருகின்றனர்.



Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....