ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் ஸ்பெய்ன் நாட்டுக்காரர்!


ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை, கோவை, மதுரை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், மாணவர்கள் பேரணி, உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை வஉசி மைதானத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணைந்து பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டதில், ஸ்பெய்ன், பிலிப்பைன்ஸ், மங்கோலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போராட்டம் குறித்து இதில் ஈடுபட்டுள்ள ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்த மொரிசியோ என்பவர் "சிம்ப்ளி சிட்டி"க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



நான் எனது நண்பர்களுடன் தன்னார்வ தொண்டு நிறுவன பணிக்காக இந்தியா வந்தேன். இங்கு ஜல்லிக்கட்டுக்கு தடை இருப்பதையும், அதற்கு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதையும் அறிந்து கொண்டு இங்கு வந்தேன். 

எங்க ஊர் காளை சண்டை மிகவும் பிரபலம். இருந்த போதும் மக்களை மீறி அங்கு எதுவும் நடக்காது. 5 காளைகளை விளையாட்டின் போது கொலை செய்வார்கள். அங்கு அது பாரம்பரிய விளையாட்டு என்பதால் அந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்படவில்லை. 

ஆனால், எனக்கு தெரிந்த வரையில், ஜல்லிக்கட்டு என்பது அமைதியான முறையில் காளைகளை தழுவி விளையாடும் விளையாட்டு. இங்கு காளைகள் கொல்லப்படுவதில்லை. அதனால் ஜல்லிக்கட்டு இங்கு கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டிற்காக திரண்ட கூட்டத்தை பார்த்து நானும் நண்பர்களும் காளைகள் போல் மிரண்டு போனோம்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...