மொபைல் போன் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்களை பெற “UTSONMOBILE” செயலி தெற்கு ரயில்வே அறிமுகம்


ரயில் பயணிகளுக்கு உதவும் பொருட்டு தெற்கு ரயில்வே மொபைல் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டு பதிவு செய்யும் “UTSONMOBILE” செயலியை (app) தற்போது இதர இடங்களில் உள்ள பயணிகளும் பயன்படுத்தும் பொருட்டு சில மாறுதல்களுடன் அறிமுகம் செய்துள்ளது. 

இதன் படி, பயணிகள் தங்கள் மொபைல் போனில் “UTSONMOBILE” செயலியை (app) நிறுவி, தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ள சேலம் கோட்ட ரயில் நிலையங்களான சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், கரூர், சேலம் டவுன், ஆத்தூர், சின்ன சேலம் ரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்வதற்கான தங்களது முன்பதிவற்ற பயணச்சீட்டுகளை தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு மொபைல் போன் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்களை பெற, கீழ்க்கண்டவாறு செய்யவும்:

  • தங்களது ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் மொபைலில் “UTSONMOBILE” செயலியை (app) பதிவிறக்கம் செய்து நிறுவி, பின்னர் தங்களது மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • குறைந்த பட்சம் 100 ரூபாய்க்கு ரயில்வே வாலட் (R-wallet-Railway Wallet)  மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
  • மேற்கண்ட ரயில்நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் தங்களது மொபைல் எண் மற்றும் பயணச்சீட்டு பதிவு எண்ணை பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • பிரிண்ட் செய்யப்பட்ட பயணச்சீட்டு இல்லாமல் பயணிகள் ரயில்களில் பயணிக்க இயலாது.


பயணிகளுக்கு மேற்கண்டவாறு தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகளை பெறுவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அவர்கள் அந்த ரயில்நிலையங்களில் உள்ள முன்பதிவற்ற பயணச்சீட்டு அலுவலகத்தையோ, www.utsonmobileindrail.gov.in என்ற இணையதளத்தையோ, அல்லது பயணிகள் உதவி எண்: 044-25351621ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...