பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சி கேரள அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் - கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு


தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்குவது பவானி ஆறு. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி கேரள மாநிலம் வழியாக மீண்டும் தமிழகத்திற்கு வரும் இந்த ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அம்மாநில அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதும் தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு போராட்டங்களையடுத்து தற்காலிகமாக கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக கேரள எல்லையான ஆனைக்கட்டியிலிருந்து 30 வது கிலோ மீட்டர் தொலைவில் பாலக்காடு மாவட்டம்  அட்டப்பாடி அடுத்த தாவளம் செல்லும் சாலையில் தேக்கோட்டை எனும் இடத்தில் சுமார் 12 அடி உயரத்தில் தடுப்பணை கட்டும் முதல்கட்ட பணியை துவங்கியுள்ளது கேரள அரசு. அதற்காக ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை அங்கு குவித்துள்ள கேரள அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தையும் நிறுத்தி வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்தும் கேரள அரசை கண்டித்தும் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகத்தில் தி.மு.க, வி.சி.க, தமிழ் அமைப்புகள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த.பெ.தி.கவின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், தமிழகத்தின் மூன்று மாவட்ட மக்களின் நீராதாரமான பவானி ஆற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணை கட்ட முயற்சித்து வரும் கேரள அரசை கண்டித்து வருகின்ற 21ம் தேதி கோவையில் மனித சங்கிலி போராட்டமும், 29ம் தேதி தடுப்பணை கட்டும் இடத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....