இந்தியாவில் பீட்டாவை தடை செய்ய மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாக - பாஜக, மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்


இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய அனைவரும் போராட வேண்டுமெனவும், பீட்டாவை தடை செய்ய மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன், உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு சாதகமான தீர்ப்பு வருமென எதிர்பார்த்து இருந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 2012 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்த போது தான்  ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டதாகவும், ஜல்லிக்கட்டு உரிமை பறிபோன போது கூட்டணியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் வெளியே வராத திமுக உள்ளிட்ட யாருக்கும் தற்போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை விமர்சனம் செய்ய தார்மீக உரிமையில்லை என தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வந்தால் நிரந்தர தடை விதிக்க வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், தற்போது கூட நம்பிக்கையுடன் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய பாஜக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தினால் தமிழக அரசை கலைக்க வேண்டுமென குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத பீட்டா அமைப்பிற்கு எந்த உரிமையும் இல்லை என கூறிய அவர், இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய அனைவரும் போராட வேண்டுமெனவும், அதற்கு பாஜக அரசும் முயற்சி செய்யுமென தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்காக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டுமென கூறுவது சரியானது அல்ல எனவும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களை மத்திய பாஜக அரசு ஏமாற்றவில்லை என கூறிய தமிழிசை செளந்திரராசன், தமிழ் உணர்வில் பாஜக யாரை விடவும் குறைந்தவர்கள் இல்லையென தெரிவித்தார்.   

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...