பொங்கல் விழாவில் 'டம்மி' ஜல்லிக்கட்டு கொண்டாடிய ஹிந்துஸ்தான் பள்ளி மாணவர்கள்


கோவை பீளமேடு அருகே உள்ள ஹிந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் இன்று பொங்கள் விழா கொண்டாடினர்.





இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற நடன நிகழ்ச்சிகளும், நாட்டுப்புற பாடல்களும் இசைக்கப்பட்டன. பாரம்பரிய ஆடைகளான வேட்டி கட்டி குழந்தைகள் பள்ளிக்கு வந்தனர். முன்னதாக, பாத்திகட்டி பொங்கல் வைக்கப்பட்டது. 

இவ்விழாவை ஹிந்துஸ்தான் பள்ளியின் தாளாளர் சரஸ்வதி கண்ணயன் தொடங்கி வைத்தார்.





தொடர்ந்து, மாணவர்கள் 'டம்மி' ஜல்லிக்கட்டு நடத்தினர். காளை போன்று வேடமணிந்த மாணவரை சக மாணவர்கள் துரத்தி அசல் ஜல்லிக்கட்டு போலவே விளையாடிக்காட்டினர். இந்த காட்சி காண்போரை கவர்ந்தது. மேலும், ஜல்லிக்கட்டு குறித்து குழந்தைகள் அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக இந்நிகழ்வு அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...