கோவையில் பொங்கல் விற்பனைக்கு வைத்திருந்த வேதிபொருள் கலப்படம் செய்யப்பட்ட வெல்லத்தை உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் பறிமுதல்! !


கோவையில் பொங்கல் விற்பனைக்கு வைத்திருந்த வேதிபொருள் கலப்படம் செய்யப்பட்ட  வெல்லத்தை உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் பறிமுதல்  செய்து சீல் வைத்தனர், மேலும் தாமஸ்வீதி, ரங்கே கவுண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு கரும்பு, வெல்லம், உள்ளிட்ட பொருட்களின் விற்பனை தற்போது சூடு பிடிக்க தொடங்கி உள்ளது, இந்நிலையில் கோவை தாமஸ்வீதியில் உள்ள ஒரு சில வெல்ல மண்டிகளில் பொதுமக்களை கவர்வதற்காக வெல்லத்தின் வண்ணத்தை அதிகரிக்க சோடியம் ஹட்ரோ சல்பைடு பயன்படுத்துவதாக உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று கோவை டவுன்ஹால் தாமஸ் வீதி, ரங்கே கவுண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெல்ல மண்டிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், அதில் தாமஸ் வீதி பகுதியில் உள்ள ஒரு வெல்ல குடோனில் 750 கிலோ சோடியம்  ஹட்ரோ சல்பைடு வேதி பொருள் கலந்த கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்து, சீல் வைத்தனர், மேலும் அதன் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர், ஆய்வு முடிவில் உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், கலப்பட வெல்லம் பிடிப்பட்டதை அடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள வெல்ல குடோன்களில் சோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாதிரியான வேதி பொருட்கள் கலந்த உணவை உட்கொண்டால் நுரையீரம் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் வண்ணங்களை பார்த்து இந்த மாதிரியான கலப்பட உணவு பொருட்களை வாங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...