ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து கோவை மெடிக்கல் சென்டர் சாதனை


இயந்திர விசையைச் கொண்டு (ரோபோடிக்) அறுவை சிகிச்சை செய்முறையை தற்பொழுது கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை கொண்டுவந்துள்ளது. இந்த அறுவைசிகிச்சை முறையில் ஈடுபடுபவர்கள் ஓரிரு மருத்துவர்களே ஆகும்.

மருத்துவர்கள் ரோபோடிக் இயந்திரத்தின் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார்கள். மருத்துவர்கள் கன்சோல் என்ற அமைப்பின் முன் அமர்ந்து ரோபோடிக் இயந்திரத்தின் கருவிகளை இயக்கி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் ரோபோடிக் அறுவை சிகிச்சையால் பல்வேறு நன்மைகள் உண்டு. ஒரு மிகச்சிறிய துளையின் வழியாக உடல் உறுப்புகளை அணுகி அதன் மூலம் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் உடலில் சிறிய தழும்பு மட்டுமே ஏற்படும். அது தவிர நோயாளிக்கு ஏற்படும் இரத்தக்கசிவும் மிகக்குறைவு.

கேஎம்சிஎச் ரோபோடிக் கார்டியாக் சர்ஜரி இன்ஸ்டிடியூட் இயக்குநர், தலைமை ஆலோசகர் மற்றும் மார்பு பகுதி அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரஷாந்த் வைஜியநாத் 10 ஆயிரம் அறுவை சிகிச்சை செய்த சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் பைபாஸ், சிக்கலான பெருந்தமணி குருதி நாள யெளிவு, வால்வு பழுது மற்றும் ரேடோ பைபாஸ் அறுவை சிக்சை போன்றவற்றை மேற்கொண்டுள்ளார்.

கொங்கு மண்டலத்திலேயே கேஎம்சிஎச் மருத்துவமனையில் இவர் தான் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். ரோபோடிக் இருதய அறுவை சிகிச்சையிலும் பயிற்சி பெற்றவர் மருத்தவர் பிரஷாந்த் வைஜியநாத்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இருதய ரோபோடிக் அறுவை சிகிச்சை நேற்று முதல்முறையாக நடைபெற்றது. இதுகுறித்து கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்ல ஜி.பழனிச்சாமி கூறுகையில், "வழக்கமாக மேற்கொள்ளப்படும் 10 - 12 அங்குலம் அளவிற்கு மார்பை திறத்து செய்யப்படும் அறுவை சிகிச்சையை காட்டிலும், ரோபோடிக் அறுவை சிகிச்சை 1 - 2 செ.மீட்டர் அளவில் குறைந்த அளவு கருவிகளைக் கொண்டு செய்யப்படுகிறது. 



குறைந்த அளவு வலி, மயக்க அளவு, இரத்த இழப்பு, விரைவாக குணமடைதல், சிறிய அளவிலேயே ஏற்படும் தழும்பு போன்றவை இதன் சிறப்பு அம்சங்கள் ஆகும். அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்காமல் ஒரு சில நாட்களிலேயே குணமடைந்து வீட்டுக்கு திரும்ப இயலும்" இவ்வாறு கூறினார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...