கொதித்தெழுந்த தமிழகம் - அடிபணிந்த மத்திய அரசு

தமிழர்களின் சிறப்புமிக்க பொங்கல் தினத்திற்கான விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மாணவர்கள், இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களுக்குரிய வகையில் எதிர்ப்புகளையும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதுதவிர, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு இதுகுறித்தான கடிதத்தையும் இன்று காலை அனுப்பி இருந்தார்.

தமிழகத்திலிருந்து இப்படி ஒரு பலத்த எதிர்ப்புகள் வரும் என்று தெரிந்தே மத்திய பாஜக அரசு இதனைத் செய்தது. கட்டாய விடுமுறைத் தொடர்பாக, பாஜக அரசின் சார்பாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வழக்கம் போல தமிழகத்தை ஆண்ட கட்சிகள் மீது இதற்கான குறையை கூறி வந்தனர்.

ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் எடுபடவில்லை என்ற சூழலில் தற்போது பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறைப் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துவிட்டு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 



செப்டம்பர் 28ம் தேதி கொண்டாடப்படும் தசரா பண்டிகையை கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் பொங்கல் பண்டிகையை வைத்துள்ளது மத்திய அரசு. 

தமிழக மக்களில் போராட்டங்களைத் தொடர்ந்து மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியென மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியும், மத்திய அரசு இதில் தலையிட்டு உடனடியாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரியும் தமிழக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொங்கள் பண்டிகைக்கே விடுமுறை கட்டாயம் அல்ல என மத்திய அரசு அறிவித்து தமிழர்களின் உணர்ச்சியை முடக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போது தோல்வியில் முடிந்ததாக அமைந்துள்ளது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...