அனைத்திந்திய பல்கலை கழகங்களுக்கிடையேயான தேசிய அளவிலான 77-வது தடகள விளையாட்டு போட்டிகள் நாளை துவக்கம்


அனைத்திந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான தேசிய அளவிலான 77-வது தடகள விளையாட்டு போட்டிகள் கோவை வ.ஊ.சி மைதானத்தில் நாளை துவங்குகிறது.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

2016-17ம் ஆண்டிற்கான அகில இந்திய அளவில் விளையாட்டு போட்டிகள் நாளை துவங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், இதில் இந்தியாவில் உள்ள 150 பல்கலை கழகங்களில் இருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற உள்ளனர்.

ஆண்கள் மற்றும் பெண்ளுக்கு 22 வகை தடகள போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பார்கள். இப்போட்டிகளில் 180 நடுவர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

மேலும், முதன் முறையாக மின்னனு இயந்திரங்கள் கொண்டு தடகள வீரர்களின் புள்ளிகள் அளவீடு செய்யப்படவுள்ளது. இதன் துவக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு தடகள போட்டிகள் தலைவர் தேவாரம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு தலைமை செயலர் ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளதாக கூறினர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...