தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாம்


கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி இம்மாதத்திற்கான வேலை வாய்ப்பு முகாம், வரும் 13ம் தேதியன்று காலை 10.30 மணி முதல் 4 மணி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து பட்டதாரி, முதுகலை பட்டப்படிப்பு, ஐடிஐ படிப்பு பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்கள் என அனைத்து கல்வித் தகுதி உடையவர்களும் பங்கேற்கலாம்.

இந்நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலையளிப்போர் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் பங்கேற்போரிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மேலும், இதன் மூலம் வேலை பெருவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்துசெய்யப்பட மாட்டாது.

எனவே இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பெருந்திரளானோர் பங்கேற்று வேலை பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...