10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி த.பெ.தி.க-வினர் ஆட்சியரிடம் மனு


தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சிறை கதவுகளுக்கு பின்னர் கைவிலங்கு அணிந்து இருப்பது போல நூதன முறையில் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு அவ்வமைப்பினர் சிறைவாசிகளின் நிலையை சித்தரிக்கும் வகையில் சிறை கதவுகளுக்குள் இருப்பது போல சித்தரிக்கும் வகையில், சிறை கதவுகளுடன் கைவிலங்கு அணிந்தபடி வந்தனர். 

கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுள் தண்டனை கைதிகள் பத்து ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கைதிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருவதாகவும் த.பெ.தி.க-வினர் குற்றம் சாட்டினர். 

கடந்த காலங்களில் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போல, பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனவும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரரிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். 

சிறை கதவுடன் கைவிலங்கிட்டபடி மனு அளிக்க வந்தவர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...