ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழிநுட்பக் கல்லூரியில் "வேளாண் திருவிழா 2017" துவக்கம்


கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் எல் ஆன் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கள் திருவிழாவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை (ஜனவரி 9, 10) கல்லூரியின் வேளாண் பொறியியல் துறைகளின் சார்பில் விவசாயத்தை முதன்மைபடுத்தி "வேளாண் திருவிழா 2017" கொண்டாட்டம் துவங்கியது.



இந்த விழாவின் முக்கிய அம்சமாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் குறித்த கண்காட்சியும், கருத்தரங்கமும், கலந்துரையாடல் ஆகியவை இடம்பெற்றன.



மேலும் இந்த கண்காட்சியில் தமிழகத்தை சேர்ந்த 50-க்கும் மேம்பட்ட வேளாண் இயந்திரம் மற்றும் சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் இக்கல்லூரி பொறியியல் மற்றும் இயந்திர பொறியியல் மாணவ, மாணவிகளும் தங்களுடைய நவீன கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.



இக்கண்காட்சியானது, விவசாயிகளுக்கும், மாணவ- மாணவிகளுக்கும், வேளாண் துறையைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்புகளையும், இயந்திரங்களையும் பற்றி அறிந்துகொள்ள வழி வகுக்கும்.



இக்கண்காட்சி மற்றும் துவக்க விழா இன்று ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கோவை இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் முதன்மை விஞ்ஞானி முனைவர் ஜேக்கப் அண்ணாமலை விழாவினை தொடக்கிவைத்து உரையாற்றினார்.



ஜெயின் நீர்பாசன குழுமத்தின் துணைத் தலைவர் முனைவர் எஸ்.நாராயணன், புதுதில்லி தேசிய விதைக் கழகத்தின் துணைப் பொது மேலாளர் மற்றும் பொறியியல் பிரிவுத் தலைவர் பொறியாளர் எஸ்.குமாரசெல்வம் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.



இதைத்தொடர்ந்து, வேளாண் பொறியாளர் சண்முகம், பசுமைக்குடில் சாகுபடி கலந்துரையாடலை துவக்கி வைத்தார். வேளாண் பொறியாளர் பிரபுசங்கர், "மண்ணில்லா விவசாயம்" என்பது குறித்து சிறப்புரையாற்றினார். கால்நடை வளர்ப்பு, பால்வளம், பால்பொருட்கள் உற்பத்தி மற்றும் இந்தியாவில் பால் பொருட்கள் உற்பத்திக்கு முனைவர் குறியன் ஆற்றிய பங்கு எனும் தலைப்பில் பாலமுருகன் கருத்துரை வழங்கினார்.

ஆரோக்கியமான கீரை சாகுபடி குறித்து ஜெகநாதன், நம் நாட்டு இன மாடுகளினால் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் குறித்து சிவக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.



இக்கண்காட்சி குறித்து ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியின் தலைவர் முனைவர் செ.தங்கவேலு கூறுகையில், இந்த வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் மாணவ, மாணவிகளுக்கிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விவசாயத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு அறியச்செய்யப்பட்டுள்ளது. மேலும், வேளாண் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பற்றிய ஆராய்ச்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபட இது வழிவகுக்கும்" என கூறினார்.

Newsletter

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...