எல்.ஐ.சி காலனியில் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு

கோவை எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் வித்யா ராமசாமி. இவரது கணவர் ராமசாமி காசியாபாத் சிண்டிகேட் வங்கியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். வித்யா ராமசாமி பொள்ளாச்சி எல்.ஐ.சி யில் உயர் நிலை உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல பணிக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பிய வித்யா ராமசாமி வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதன் உள்ளே வைக்கபட்டிருந்த 80 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த போத்தனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இக்கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.





Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...