பணவர்த்தக சேவை மின்னணு மற்றும் இணையதளத்தின் மூலம் எவ்வாறு செயல்படுகிறது என ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவிலான "பணவர்த்தக சேவை மின்னணு மற்றும் இணையதளத்தின் மூலம் எவ்வாறு செயல்படுத்துவது" என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கினை அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள கிளைய்ட்டான் மாநில பல்கலைக் கழகத்தின் மேலாண்மைத் துறையின் தலைவர் முனைவர் அவிநந்தன் முகர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.

இக்கருத்தரங்கில் இணையதளம் மற்றும் மின்னணுவின் மூலம் பணபரிவர்த்தனை எவ்வாறு சிறப்பாக செய்வது, இதன் முகியத்துவத்தினை பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எடுத்துரைப்பது குறித்து 85 ஆய்வுக் கட்டுரைகளை இந்தியாவில் இருந்து பல்வேறு வர்த்தக நிபுணர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் சமர்ப்பித்திருந்தனர். இவையனைத்தும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.



மேலும், இந்நிகழ்ச்சியில் எலைகா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனம், மும்பை நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் கஜேந்திர கோத்தாரி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, இக்கருத்தரங்கினை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமையேற்று துவக்கி வைத்தார். முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.சுந்தரராமன் கருத்தரங்க அறிக்கையினை வாசித்தார். கல்லூரி முதல்வர் பி.பாபாஞானகுமார் வரவேற்புரையாற்றினார்.



வணிகவியல் துறைகளின் தலைவர் சுமதி, அன்புமலர், சந்தானலட்சுமி, விஜிமோல் உள்ளிட்டு பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...