ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியின் சார்பில் கணினி கருத்துப்பரிமாற்றம், தகவல் பரிமாற்றத்திற்கான அகில உலக கருத்தரங்கம்

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 2017ஆம் ஆண்டில் கணினி கருத்துப்பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான அகில உலக கருத்தரங்கம் வியாழனன்று (இன்று) அக்கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

இதில் பங்குபெற இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிஜி, சீனா, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் பல நாடுகளில் இருந்து 782 ஆய்வு ஏடுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 124 ஆய்வு ஏடுகள் தேர்வு செய்யப்பட்டன.



தொடக்கத்தில் கல்லூரியின் முதல்வர் நடராஜன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தாளாளர் முனைவர் எஸ்.தங்கவேலு இணையதளம் எவ்வாறு அனைத்து துறைகளிலும் பயன்படுகிறது என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற க்யன்மெட்ரிஸ் நிர்வாக இயக்குநர் ராஜன் பரசுராமன், மிகை யதார்த்தம் பற்றியும், அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், தொடர்பு திறனும், அதை மேம்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் மிகவும் இன்றியமையாதது என கூறினார்.

இதைத்தொடர்ந்து, நிலைப் பொருள் அபிவிருத்தி, ஐபிஎம் இந்தியா மென்பொருள் ஆய்வக அமைப்புக் குழுவைச் சேர்ந்த கதிரவன் வேலுசாமி பேசுகையில், மென்பொருள் அலுவலகத்தின் பணியாற்ற நிர்வாக திறன் மற்றுமல்லாமல் சிக்கல் தீர்க்கும் திறன் மிகவும் அவசியம் என்று கூறினார். மேலும், நம் தனிப்பட்ட வாழ்க்கையில் பழக்கவழக்கங்கள், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒன்றிணைந்து இருத்தல் வேண்டும் என கூறினார்.

இதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களால் கருத்தரங்கப் புத்தகம் வெளியிடப்பட்டது. நிரைவாக, தகவல் தொடர்பு துறை தலைவர் பிரகாஷ் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியினை நிரைவு செய்தார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...