பெண்களிடம் தரக்குறைவாக நடந்துவரும் மைக்ரோ பைனான்ஸ் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்


பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தவனை செலுத்த அவகாசம் கேட்ட பெண்களிடம் அவமரியாதையாக பேசிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் பத்து பேர், இருபது பேர் என்று மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்று மாதமாதம் தவனை செலுத்தி வருகின்றனர். 

இதனிடையே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இதுவரை முறையாக பணத்தை கட்டிய கடன் பெற்ற பெண்கள் தற்போது உரிய தேதியில் பணத்தை கட்ட முடியாமல் சிரமப்படுவதால் உரிய நேரத்தில் செலுத்த முடியாத சூழல் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் பணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசுவதாக கூறி கடன் பெற்ற பெண்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது மீண்டும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் பெண்களிடம் தரக்குறைவாக பேசியதாகவும் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில் பேசி வருகிற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் இணைந்து பெண்கள் இன்று தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...